ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய.. இந்த பொடி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Rupa

உடல் எடையை கூடிக்கொண்டே செல்கிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர்.இந்த உடல் பருமன் பிரச்சனைக்கு இயற்கை வழியில் தீர்வு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)சீரகம் – இரண்டு தேக்கரண்டி
3)பட்டை – ஒரு துண்டு
4)கொத்தமல்லி விதை – இரண்டு தேக்கரண்டி
5)மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி
6)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்து கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு லேசாக வறுக்கவும்.வாசனை வரும் வரை மட்டும் வறுத்தால் போதுமானது.வறுகின்ற பொருட்கள் கருகிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வெந்தயம் வறுபட்ட பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.பிறகு சீரகம்,கொத்தமல்லி,பட்டை உள்ளிட்ட பொருட்களை தனித்தனியாக வறுத்து அறவிட வேண்டும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து ஈரமில்லாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அரைத்த பொடி ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் உடல் எடை மளமளவென குறையும்.

மற்றுமொரு தீர்வு

தேவையான பொருட்கள்:

1)ஓமம் – 25 கிராம்
2)கருஞ்சீரகம் – 25 கிராம்
3)வெந்தயம் – 25 கிராம்

செய்முறை:

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து 25 கிராம் ஓமம் போட்டு குறைவான தீயில் வாசனை வரும் அளவிற்கு வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பிறகு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு வேண்டும்.இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடராக்கி கொள்ள வேண்டும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அரைத்த பொடி ஒரு ஸ்பூன் அளவு நீரில் கொட்டி கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடை சீக்கிரம் குறைந்துவிடும்.