உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்!

0
379
#image_title

உடல் எடை ஒரே வாரத்தில் குறைய! 20 பல் பூண்டு இருந்தால் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த உடல் எடையினால் மிகவும் அவதிப்படுகின்றனர். மாறிவரும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கின்றனது.

உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஆப்பிள் பழங்களை ஜூஸாக அரைத்து அதனை பல நாட்கள் புளிக்க வைத்து உடலுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்களை சேர்த்து வடித்தெடுக்கப்படும் சாரு தான் ஆப்பிள் சடர் வினிகர் இதனை மேலை நாடுகளில் கூல்ட்ரிங்ஸ் ஆக பயன்படுத்துகிறார்கள். பொதுவாக உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

இதனுடன் பேக்கிங் சோடா, தண்ணீர் இது இரண்டையும் சேர்த்து கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் உடல்நிலை வேகமாக குறையும்.

எல்ஜிஹெச் ட்ரிங் அரை எலுமிச்சம் பழம் சாறு, இஞ்சி கால் டீஸ்பூன்,தேன். முதலில் இஞ்சை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். இந்த இஞ்சி தண்ணியானது ஆரிய பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய தொடங்கி விடும்.

வெந்தய டீ இதில் கரையக்கூடிய நார்ச்சத்து கரையா நார்ச்சத்து இருக்கிறது. இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெந்தயத்தை போட்டு வடிகட்டி மதிய உணவு சாப்பிடும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு குடித்து வந்தால் உடல் எடை குறைந்து விடும்.

பூண்டு இது உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் இருதய பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக அமையும்.இதில் இருக்கக்கூடிய அல்லிசன் என்று சொல்லக்கூடிய ஆன்டி-ஆக்சைடு மற்றும் அமினோ ஆசிட் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது. ஒரு டம்ளர் பாலில் 20 பல் பூண்டு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும் கொதித்த பிறகு அதனை வடிகட்டி மாலை 4 மணிக்கு மேல்குடித்து வர உடல் எடை குறையும்.

Previous articleஇனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்!
Next articleதோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!