இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையிலான 5 வது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்றது இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் இல் சொதப்பியது முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. இன்றைய நாள் ஆட்டம் முடியும் நிலையில் 3 ஓவர்கள் மட்டுமே இந்திய அணி வீசியது. இதில் முதல் ஓவரை பும்ரா வீசிய பந்தில் கொன்ஸ்டாஸ் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். அடுத்து மூன்றாவது ஓவரை பும்ரா வீச வந்தார். அப்போது கவாஜா பேட்டிங் முனையில் இருக்க அவர் போட்டியின் நேரம் கடத்துவதற்காக பந்து வீச வந்த போது அவர் தயாராகவில்லை அதனால் சைகையில் பும்ரா பேசினார். அதற்கு நான் ஸ்ட்ரைக்கில் இருந்த கொன்ஸ்டாஸ் அவரை சீண்டினார்.
அடுத்து அன்றைய நாள் ஆட்டத்தில் 3 வது ஓவரில் கடைசி பந்தை பும்ரா வீசினார் அந்த பந்தில் கே எல் ராகுல் கேட்ச் பிடிக்க அவுட் ஆகினர். சீண்டியது கொன்ஸ்டாஸ் விக்கெட் ஆனது கவாஜா. மேலும் இதுவரை கவாஜா எட்டு இன்னிங்ஸில் விளையாடி 6 முறை பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது 9 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்துள்ளது.