ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!!
உங்கள் ஆதார் அட்டை தொலைத்து விட்டால் யாரும் பயப்பட வேண்டாம். ஆதார் கார்டை திரும்ப பெறுவதற்கான வழிமுறையை பற்றி காண்போம். நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானது ஆகும். இது இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது.
நம்முடைய ஆதார் கார்டை யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நம்முடைய ஆதார் அட்டை எண்ணை மொபைலில் அல்லது இணையத்தில் சென்று லாக் செய்யலாம்.
முதலில் உங்கள் செல்போன் நம்பரில் இருந்து GET OTP என டைப் செய்ய வேண்டும். பிறகு உங்கள் ஆதாரின் இறுதி 4 இலக்க எண்களையும் பதிவு செய்ய வேண்டும்.
இதனை 1947 என்ற எண்ணிற்கு SMS ஆக அனுப்பி விடவும். இதன் பிறகு உங்கள் செல்போன் எண்ணுக்கு UIDAI யில் இருந்து 6 இலக்க OTP வரும். திரும்ப உங்கள் மொபைலில் இருந்து, LOCKUID இதனையடுத்து இறுதி 4 இலக்க ஆதார் எண்ணையும், நீங்கள் பெற்ற 6 இலக்க OTP ஐயும் பதிவிட வேண்டும்.
இதனை இணையதளம் மூலமாகவும் லாக் செய்யலாம். ஒருவேளை உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால் பதற்றமடைய தேவையில்லை.
உங்களின் பதிவு எண் மற்றும் ஆதார் நினைவில் இல்லை என்றால் இணையத்தளத்தில் சில வழிமுறைகளை பின்பற்றி திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
- முதலில் gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- இனையதளத்தின் முதல் பக்கத்தில் ஆதார் டேப்பில் உள்ள ஆதார் சேவைகளின் கீழ் யுஐடி / இஐடி யைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உங்கள் பெயர், மொபைல் எண்ணை போட வேண்டும்.
- கேப்ச்சாவை சரிபார்த்து OTP யை தர வேண்டும்.
- இப்போது உங்கள் செல்போனில் நீங்கள் பெற்ற 6 இலக்க OTP யை போடவும்.
- கடைசியாக SMS மூலம் உங்கள் செல்போனில் கூறப்பட்ட யுஐடி/ இஐடி எண்ணை பெறுவீர்கள்.
உங்களுடைய ஆதார் அட்டையில் செல்போன் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், உடனடியாக அதை செய்யுங்கள். இல்லையென்றால் எந்த ஒரு ஆன்லைன் சேவைகளையும் உங்களால் பயன்படுத்த முடியாது.