நாம் பயன்படுத்தக் கூடிய செல்போன் தொலைவது என்பது பலருக்கு கை உடைந்தால் போல மாறிவிடுகிறது. காரணம் பயன்படுத்தக்கூடிய செல்போனில் உள்ள தரவுகள். எங்க தரவுகளை பாதுகாக்கவே பலரும் செல்போன் திருட போய்விட்டால் அல்லது தொலைந்து போய்விட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.
இனிமேல் இதுபோன்ற அலைய வேண்டிய தேவை இல்லாமல் அரசு அறிமுகப்படுத்த உள்ள போர்டலில் விவரங்களை உள்ளீடு செய்தாலே தொலைந்த செல்போன் கூடிய விரைவில் கிடைத்துவிடும். இதற்கு கட்டாயமாக நம் செல்போனில் இருக்கக்கூடிய 15 இலக்க எண்ணான IMEI எண் தெரிந்திருத்தல் அவசியம்.
இந்த எண்ணானது செல்போன் வாங்கும் பொழுது அதன் அட்டையில் இடம் பெற்றிருக்கும். இன்னும் சில மொபைல் போன் மாடல்களில் செல்போன் பேட்டரியில் இந்த எண்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அதுவும் இல்லை என்றால் செல்போனில் *#06#என்று எண்ணை டயல் செய்வதால் உங்களுடைய IMEI நம்பர் கிடைக்கும்.
உடனடியாக தொலைந்த செல்போனை செயலிழக்க அல்லது மீண்டும் பெற செய்ய வழிமுறைகள் :-
✓ முதலில் செல்போன் தொலைந்தவுடன் அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்து அதன் FIR Copy பெற்று வருதல் அவசியம்.
✓ CEIR என்ற போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
✓ அதில் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட புகார் நகல் மற்றும் தொலைந்த செல்போனின் விவரங்கள், செல்போனின் உடைய உரிமையாளரின் விவரங்கள் என அனைத்து தரவுகளையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
✓ அதன் பின் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்ய வேண்டும்.
✓ உங்கள் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு உங்களுக்கான ஐடி ஒன்று திரையில் தோன்றும். இந்த ஐடியை கட்டாயமாக குறித்து கொள்ள வேண்டும்.
உங்கள் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் CEIR போர்ட்டலின் மூலமாக உங்களுடைய செல்போன் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நெட்வொர்க்கின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தாலும் உடனடியாக முடக்கப்படும். இதனால் திருடர்களால் திருடிய செல்போன்களை விற்கவோ பயன்படுத்தவோ முடியாது. மீண்டும் உங்களுடைய செல்போன் உங்களுக்கு கிடைத்த பின் CEIR மூலமாக உங்களுடைய போன் முடக்கப்பட்ட இருப்பதை நீக்கி மீண்டும் பயன்படுத்தலாம்.