வீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை…

Photo of author

By Parthipan K

வீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை…

Parthipan K

Love couples who ran away from home!.. Complain about sudden boyfriend? Police investigation...

வீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை…

சேலம் மாவட்டம்  கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இருபது வயதேயான பெண். இவர் அதே பகுதியிலுள்ள 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்கள்.

பிறகு எங்கள் வீட்டில் என்னையும் என்னுடைய காதல் கணவனையும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் எனது சகோதரி அதாவது அக்கா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.அதனையடுத்து என்னுடைய கணவர் நடத்தையில் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது.

என்னையும் மற்றும் என்னுடைய தாய்,அக்கா ஆகிய அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பதிவிறக்கம் செய்துள்ளார். இதனை பார்த்த நாங்கள் பெரும அதிர்ச்சியை அடைந்துள்ளோம். இதனால் அருகில் வசிக்கும் அக்கம் பக்கத்தினர் எங்களை இழிவாக பார்க்கின்றனர்.

வீதியில் நடக்கவே முடிவதில்லை. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய காதல் கணவர்தான். எனவே சமூக வலைதளத்தில் தங்களை ஆபாசமாக பதிவிட்ட பதிவுகளை அனைத்தையும் நீக்க நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென அவர் புகார் மனுவில் கூறியிருந்தார். மேலும் இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காதல் திருமணம் செய்த பெண் மூன்று மாதத்திலேயே கணவன் மீது புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.