திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!!

0
221
Love of the son of a DMK leader!! Murdered girl!!
Love of the son of a DMK leader!! Murdered girl!!

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!!

திமுக கவுன்சிலரின் மகனை காதலித்ததால் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சவாரிமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் பெயர் தங்கராஜ். தங்கராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைவாணியை பிரிந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கலைவாணியின் மூத்த மகள் தேவிகா. இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு சென்ற ஆண்டு முதல் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு முதல் தேவிகாவை காணவில்லை. அனைத்து இடங்களிலும் தேடிய கலைவாணி, மகள் எங்கும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவிகாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் காலை ஊருக்கு பக்கத்தில் உள்ள குஞ்சப்பன் என்பவரது கிணற்றில், தேவிகா பிணமாக கிடந்தார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் தேவிகாவின் உடலை மீட்டனர். பின்னர் தேவிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தேவிகாவின் தாயார் கலைவாணி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் கூறினார். போலீசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். இதனிடையே திருச்சி அரசு மருத்துமனையில் தேவிகாவின் உறவினர்கள், தேவிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தேவிகா, அவரது வீட்டின் அருகே குடியிருக்கும் திமுக வார்டு கவுன்சிலர் குணசேகரன் என்பவரின் மகன் கஜேந்திரனை காதலித்து வந்ததாகவும், இதனை அறிந்த குணசேகரன், தேவிகாவின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில்தான் தேவிகா கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

இந்த காதல் பிரச்சினையால் தேவிகா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தேவிகாவின் தாய் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் விசாரித்து வருகின்றனர்.

Previous articleமகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!!
Next articleஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!!