இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர்! கும்பலாக மிரட்டியதால் நடந்த விபரீத சம்பவம்!

0
202

திருச்சி மாவட்டம் சமயபுரம் பேரூராட்சி பகுதியில் வசிப்பவர் விஜயா. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தனது கடைசிமகன் தினேஷுடன் வாடகை வீட்டில் வசிந்து வந்தார். ஆந்திராவில் ரயில்வே ஒப்பந்த பணியாளராக வேலை செய்த தினேஷ், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் சமயபுரத்திற்கு வந்துள்ளார். கடந்த மூன்று வருடமாக அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்துள்ளார். காதல் பற்றிய செய்தி பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே, பெண்ணின் தாயார், பெரியம்மா மற்றும் அவரது தம்பி உட்பட 10 க்கும் மேற்பட்டோர் தினேஷ் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து காதலியை நேரில் அழைத்து காதலன் முன்பே துன்புறுத்தியதோடு இனி எங்கள் பெண்ணை பார்க்கவோ, பேசவோ கூடாது என்று பத்திரத்தில் எழுதியும் வாங்கிக் கொண்டனர். இச்சம்பவத்திற்கு பின்னர் சோகத்துடன் காணப்பட்ட தினேஷ் காதலியை காணமுடியாது என்ற ஏக்கத்தில் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காதலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமீண்டும் உயர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை! இன்றைய நிலவரம்
Next articleதிமுகவில் மேலும் ஒரு எம்எல்ஏ வுக்கு கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் தொண்டர்கள்