வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!!

Photo of author

By Amutha

வன்முறையால் பிரிந்த காதல்!! தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு பிரதமரிடம் குகி இனப்பெண் உருக்கம்!!

கலவரம் காரணமாக பிரிக்கப்பட்ட தனது கணவரை சந்திக்க உதவி செய்யுமாறு குகி இனப்பெண் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மெய்தி மற்றும் குகி சமூக இன மக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் 3-ஆம் தேதி வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக வீடுகள்,பள்ளி,கல்லூரிகள் த, கடைகள்,கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன.இந்த கலவரத்தில் பெண்கள் தான் அளவுக்கு அதிகமான பாதிப்புகளை சந்தித்தனர். கடத்திச் செல்லப்பட்டு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். மேலும் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு வெளியான வீடியோ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் மெய்தி சமூகத்தினரை மீட்டு பாதுகாப்புக்காக இம்பாலில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இதில் ஒரு ஜோடி கலப்பு திருமணம் செய்ததால், குகி இனப்பெண் என்பதால் அவர் முகாமை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார்.

கோகிரிசாங் என்ற அந்த இளம்பெண் கூறுகையில்,
ஒரு மாதம் வரை என் கணவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. அவரிடம் யாரும் பேச விடவும் இல்லை. மேலும் அவரி தொடர்பு கொள்ள அழைத்தபோது போன் சுவிட்ச் ஆப் என வருகிறது.அவரது நிலைமை குறித்து எந்தவித தகவலும் தெரியவில்லை.

மெய்தி சமூக நபரை திருமணம் செய்ததால் என்னையும் அவர்களில் ஒருவராக கருதுவார்கள் என நினைத்தேன். ஆனால் எனது ஆதார் அட்டையை பார்த்த முகாமில் உள்ளவர்கள் எனது பெயரைப் பார்த்து நான் குகி இனப்பெண் என தெரிய வந்ததும் கட்டாயப்படுத்தி வெளியேற்றி விட்டனர்.

எனது குழந்தை அவனது தந்தை ,தாத்தா-பாட்டியை பார்க்க பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் உதவி செய்ய வேண்டும். மேலும் எனது கணவருக்கும்,உறவினர்களுக்கும் நான் உயிருடன் உள்ளதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.என வேதனையுடன் கூறினார். வன்முறை பரவி 2 மாதங்கள் கடந்த நிலையிலும் அங்கு இயல்பு நிலை இன்னும் திரும்பாமல் மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.