ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !! 

Photo of author

By Amutha

ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !! 

Amutha

Love that hides the already married!! Lover's action due to girlfriend's perverse decision !!

ஏற்கனவே திருமணமானதை மறைத்த காதல் !! காதலியின் விபரீத முடிவால் காதலன் செய்த செயல் !! 

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்த வாலிபரால் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில்  காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களுரு தேவனஹள்ளி தாலுக்காவில் விஜயபுரா நகரில் கோலாரை சேர்ந்தவர் பவித்ரா. இவர் அங்குள்ள வாடகை வீட்டில் வசித்து கொண்டே அருகில் உள்ள உர நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

அதே உர நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வந்தவர் குரு பிரசாத். பவித்ரா மற்றும் குரு பிரசாத் இடையே ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

குரு பிரசாத்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இருந்தாலும் அவர் அதை மறைத்து பவித்ராவை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். அவரின் திருமண செய்தி பவித்ராவிற்கு தெரிய வந்ததும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட பவித்ரா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பவித்ராவிற்கு போன் செய்து அவர் எடுக்காமல் போனதால் அவரது நண்பர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தந்தனர்.

உடனேவிஜயப்பூர்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பவித்ரா இறந்தது குரு பிரசாத்க்கு தெரிய வந்தது. உடனேஅவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரும் கோலாரை சேர்ந்தவர்கள். இந்த இரண்டு சம்பவம் குறித்து விஜய்ப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.