காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்!! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!

Photo of author

By Jayachandiran

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!

தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்த நாடு பகுதி அருகே காதலித்துவிட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நாடக காதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புகழ் என்னும் பெயர் கொண்ட இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் மிகவும் பிடித்துப் போன காரணத்தால் வீட்டில் எதுவும் சொல்லாமல் இருவர் வீட்டு பெற்றோருக்கு தெரியாமல் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இதனையடுத்து, வேலையின் காரணமாக காதலன் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிது. பின்னர் தனது காதலனுக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் செய்ய இருப்பதாக அருணாவிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சமீப காலத்தில் காதலித்து பெண்களை ஏமாற்றும் நாடக காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாடக காதல் சம்பவங்களை மையமாக வைத்து திரெளபதி என்ற திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.