காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!

0
294
Lover who stopped his girlfriend's wedding in cinematic style! Police registered a case!
Lover who stopped his girlfriend's wedding in cinematic style! Police registered a case!

காதலியின் திருமணத்தை சினிமா பாணியில் நிறுத்திய காதலன்! போலீசார் வழக்கு பதிவு!

சென்னை நெடுஞ்செழியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி என்ற பெண்ணிற்கும் மணிகண்டன் என்பவருக்கும் குடுபத்தினர் முன்னிலையில் நேதாஜி  நகரில் உள்ள முருகன் கோவிலில் இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கோவிலுக்கு வந்த சதீஷ் என்பவர் ரேவதியை காதலிப்பதாக கூறி திருமணத்தை நிறுத்தினார். அப்போது ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்  சதீஷ் என்பவரை பிடித்து அடித்துள்ளார்.

அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து போளிசர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் கோவிலுக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் ரேவதி மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வண்ணாரப்பேட்டையில் உள்ள நகை கடையில் ஒன்றாக வேலை செய்து வந்தனர் என்பது தெரியவந்தது.அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.அதனால் திருமணம் நடக்கவுள்ளது தன்னை அழைத்து செல்லுமாறும் சதீஷ் என்பவருக்கு ரேவதி குறுஞ்செய்தி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

Previous articleஇன்று டும் டும் டும் அடிக்க இருந்த புது மாப்பிள்ளைக்கு மர்மநபர்கள் ஊதிய சங்கு! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
Next articleகோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here