காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!!

0
581

காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் வந்தாலே பலருக்கு அந்த நாள் முழுக்க குதூகலமாக அமைந்துவிடுகிறது. இந்த காதலர் தினம் எப்படி தோன்றியது என்பதை வரலாற்றில் தேடிப்பார்ப்போம்.

காதல் செய்யும்  இளைஞர்கள் காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்த விரும்புவார்கள். காதலர் தினம் பற்றிய வரலாற்று சான்றுகள் ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் கிடைத்துள்ளதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. ரோமாபுரி நாட்டில் கிளாடியுஸ் மிமி ஆட்சி நடந்தபோதுதான் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தன்னுடைய நாட்டில் யாரும் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவில், இனி யாரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசனின் உத்தரவை எதிர்த்து அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் என்பவர் ரகசியமான காதல் திருமணங்களை நடத்தி வைத்தார். அரசனின் உத்தரவை மீறியதன் விளைவாக பாதிரியார் வாலண்டைன் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு அவருக்கு மரண தண்டைனைக்கான நாளும் அரசனால் குறிக்கப்பட்டது.

சிறையில் இருந்த வாலண்டைனுக்கும் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் உருவானது. இருவரும் சிறையில் இருந்தாலும் இவர்களின் காதல் சுதந்திர பறவையாகவே இருந்தது. இந்த காதல் விவகாரம் சிறைக்காவலருக்கு தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தார். இருவரும் பிரிந்த தூரமான நிலையில் இருவருக்குமான காதல் மிக நெருக்கமாகியது  தனது காதலியை பார்க்கமுடியாத வாலண்டைன் காதலி அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்தினை அட்டை மூலம் எழுதி அனுப்பினார்.

வாழ்த்து அனுப்பிய வாலண்டைனுக்கு அதே நாளே, கல்லால் அடித்தும் கொடுமையான சித்ரவதை செய்து அவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். வாலண்டைன் கொல்லப்பட்ட தினம் கி.பி.270 பிப்ரவரி 14ம் நாளாகும். இந்த நாளைதான் வாலண்டைன் தினம் அல்லது காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் இறந்தாலும் உண்மையான காதல் ஒருபோதும் சாகாது என்பதற்கு இவர்களின் அன்பே சாட்சியாகும்.

Previous articleசூரரைபோற்று நாயகியின் சூடேற்றும் படங்கள்! இப்படியா போஸ் கொடுப்பது!!
Next articleவேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!