ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன்

Photo of author

By Anand

ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன்

Anand

Updated on:

ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன்

தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு நபருடன் நிச்சயம் செய்த காதலியை பழி வாங்க நினைத்த காதலன் இருவரும் இணைந்தவாறு உள்ள படத்தை ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி,மஞ்சு விளை பகுதியில் வசிப்பவர் விஜய்ரூபன்.இவர் அதே பகுதியில் பறவைகள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.அதே போல நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2 வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.

இந்நிலையில் அவர் 4 வருடங்களாக காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து அதற்கான நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.இதற்கு சம்பந்தபட்ட அந்த பெண்ணும் உடந்தையாக இருந்ததால் தன்னை அந்த பெண் ஏமாற்றிய விரக்தியில் இருந்துள்ளார்.

காதலித்த பெண் தன்னை ஏமாற்றிய விரக்தியில் இருந்த அவர் காதலியை பழி வாங்க நினைத்து இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை போஸ்டராக அடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்துடன் அவருக்கு எழுதிய கவிதையையும் போஸ்டரில் அடித்துள்ளார்.

களக்காடு முழுவதும் ஒட்டிய அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் மணமகன் வீட்டிற்கு எதிரிலும் ஒட்டியுள்ளார்.இதனால் சுதாரித்து கொண்ட மணப்பெண் வீட்டார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.