டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற சொகுசு கார்களை பயன்படுத்திவந்த முதலமைச்சரின் திடீரென்று ஜாகுவார் லேண்ட் க்ரூஸர் காருக்கு மாறி உள்ளார் சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த காரை முதல்வர் ஸ்டாலினுடைய மகனான உதயநிதி வாங்கி தந்தை ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்து இருப்பதாக அறிவாலயத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெயரில் TN.01 BV2345 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த காரை தான் இனி ஸ்டாலின் பயன்படுத்த வேண்டும் என்று உதயநிதி அன்பு கட்டளை போட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
சமீபத்தில் மழை வெள்ளத்தை பார்வையிடுவதற்காக தென்மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பயணம் செய்த சமயத்தில் புதிய கார் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட உதிரி பாகங்களை கொண்டு இந்தியாவின் புனே நகரில் இந்த கார் வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த காரில் சொகுசு இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த காரின் பாதுகாப்பைப் பொருத்தவரையில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிடும் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், ஜாகுவார் கார்கள் சுமார் ஆறு முறை உருண்டாலும் உள்ளே இருக்கும் நபருக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.
இருக்கையில் அமர்ந்து இருக்கும் போது முதுகு, கை, கால், உள்ளிட்ட பகுதிகளில் மசாஜ் செய்யும் வசதிகளும் இந்த காரில் இருக்கின்றது. எனவும் தெரிவிக்கும் முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், இத்தனை சிறப்பு அம்சம் கொண்ட இந்த காரை பயன்படுத்துவதில் முதலமைச்சருக்கு அவ்வளவு நாட்டமில்லை என்று தெரிவிக்கிறார்கள்.