LOW BLOOD PRESSURE: குறை இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்!!

நமது உடல் ஆரோக்கியமாக இயங்க இரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும்.இரத்த அழுத்தம் உயர்ந்தாலோ அல்லது குறைந்தாலோ அது நமக்கு ஆபத்தாக மாறிவிடும்,இதில் ஹைபோடென்ஷன் என்று அழைக்கப்படும் குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறை இரத்த அழுத்த அறிகுறிகள்:

1)மயக்கம்
2)தலைச்சுற்றல்
3)உடல் சோர்வு
4)குழப்பம்
5)கண் பார்வை குறைபாடு
6)மூச்சு திணறல்

குறை இரத்த அழுத்தத்தை குணமாக்கும் வீட்டு வைத்தியம்:

தீர்வு 01:

பால் – ஒரு கிளாஸ்
வாழைப்பழம் – ஒன்று

அடுப்பில் பாத்திரம் வைத்து பாலை ஊற்றி சூடுபடுத்தவும்.இதனிடையே ஒரு கனிந்த வாழைப்பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சூடாகி கொண்டிருக்கும் பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் குறை இரத்த அழுத்த பாத்திற்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 02:

பசும் பால் – ஒரு கிளாஸ்
உலர் திராட்சை – 10

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றவும்.பிறகு அதில் 10 உலர் திராட்சை போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் குறை இரத்த அழுத்தத்திற்குதீர்வு கிடைக்கும்.

தீர்வு 03:

பாதாம் பருப்பு – 10
பால் – ஒரு கிளாஸ்

கிண்ணத்தில் பத்து பாதாம் பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நாள் முழுவதும் ஊறவிடவும்.பிறகு இதன் தோலை நீக்கிவிட்டு பருப்பை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் பாதாம் பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.

தீர்வு 04:

பீட்ரூட் – ஒன்று
தண்ணீர் – ஒரு கப்

ஒரு மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பருகி வந்தால் குறை இரத்த பாதிப்பு குணமாகும்.

தீர்வு 05:

தண்ணீர் – ஒரு கிளாஸ்
உப்பு – கால் தேக்கரண்டி

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கால் தேக்கரண்டிக்கும் குறைவான அளவு உப்பு கலந்து பருகி வந்தால் குறை இரத்த அழுத்தம் குணமாகும்.