மீண்டும் குறைந்த தங்கம் விலை!! மேலும் குறைய வாய்ப்புகள் உள்ளதா??

0
240
Low gold price again!! Any chance of more or less??
Low gold price again!! Any chance of more or less??

தங்கம் விலை இன்றும் சற்று குறைந்துள்ளது. எனவே தங்கம் வாங்கும் பொதுமக்கள் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய மக்களின் இன்றையமையாத தேவைகளில் ஒன்றாக தங்கமும் உள்ளது. தங்கம் நமது இந்திய மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஒன்றி உள்ளது. எந்த சுப காரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாத  சுப கரியங்கள் இல்லை எனலாம்.

ஆனால் கடந்த சில வருடங்களாக ஏறிவரும் தங்கத்தின்  விலையால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவு சூழல் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதங்களில் தங்கத்தின் விலை உயர்வு உச்சத்தில் இருந்து வருகிறது. மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த விலை உயர்வு இரண்டு தினங்களாக சற்று குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூபாய் 70 குறைந்து ரூ.7,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 குறைந்து ரூபாய் 56,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இன்று மேலும் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5  குறைந்து ரூ.7025 க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 56, 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் 7,480 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் ரூ.59, 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் ஒரு கிராம் 100 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று கிலோவிற்கு ரூ.2000 குறைந்துள்ளது.

Previous articleமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு?
Next articleஉங்கள் வீட்டு பூஜை அறையை பராமரிப்பது எப்படி? இதை செய்தால் மன நிறைவு உண்டாகும்!!