தமிழ்நாடு வீட்டு வாரியத்தால் விற்பனை செய்யப்படாமல் இருக்கும் குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகள் தவணை முறையின் கீழ் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் திங்கட்கிழமை நடந்த வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் பொழுது பேசிய முத்துசாமி தெரிவித்திருப்பதாவது :-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் 2024 ஆம் ஆண்டிற்கும் முன் கட்டப்பட்ட குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்புகளில் விற்பனையாகாமல் இருக்கக் கூடிய வீடுகளை தவணை முறையின் கீழ் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருவதாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒற்றைச் சாளர வீடுகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமல்லாது பார்க்கிங் பிரச்சனையை சரி செய்யும் வகையில் கட்டப்படக்கூடிய வீடுகளில் பார்க்கிங் வசதி உள்ளதா என்பதை சரி பார்த்து ஒற்றை தனி வீடாக இருப்பேன் அதில் கட்டாயமாக பார்க்கும் இருக்க வேண்டும் என்பதை சரி பார்த்த பின்னரே வீடு கட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் அடுக்கு மாடி கட்டிடங்கள் பார்க்கிங் வசதிக்காக தூண்களை அமைத்து கட்டப்படுவதை உறுதி செய்த பின் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று 2016 ஆம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட விற்பனை செய்யப்பட்ட குறைந்த வருவாய் மனைவி பிரிவுகள் தவணை முறையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தவறிய தவணைகளுக்கான வட்டி விகிதங்கள் கூடியிருக்கக் கூடியவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வட்டியானது தள்ளுபடி செய்யப்படும் என்றும் இந்த காலகட்டத்தில் வீட்டின் உடைய சொந்த பத்திரங்களை தவணை முறையை முழுமையாக செலுத்தியவர்கள் பெற்றுக் கொள்ளும் படியும் அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.