2025 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரைம் மினிஸ்டர் ஸ்ட்ரீட் வென்டார் ஆத்ம நிர்பர் நிதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கு செக்யூரிட்டி தேவை இல்லை. இதன் வரம்பு ரூ.30,000 முதல் ரூ.50,000. கிரெடிட் கார்டு வாங்குவதற்கு பயப்படுவதற்கு காரணமே அதன் டுயூ காலங்களில் கட்ட முடியவில்லை என்றால் அந்த பணத்திற்கு ராக்கெட் வட்டி செலுத்த வேண்டும். ஆனாலும் இந்த கிரெடிட் கார்டுகளுக்கு குறைந்த வட்டி விகிதமே.
இந்த கிரெடிட் கார்டு சேவையானது கோவிட் காலங்களில் தெருவோர வியாபாரிகளுக்கு வாழ்க்கை நடத்துவதற்காக தொடங்கப்பட்டிருந்தது. வியாபாரிகளின் வணிக ரீதியான முன்னேற்றத்திற்காக இது தொடங்கப்பட்டிருந்தது. இது முழுக்க முழுக்க சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகள், பழ வியாபாரிகள் மற்றும் சலவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு சேவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சரியான நேரத்தில் பணத்தை திரும்ப கட்டுவோருக்கு கூடுதல் நன்மைகளையும் அளிக்குமாறு இத்திட்டம் செயல்பட்டு வந்திருந்தது.
அதன்படி சிறு, குறு வியாபாரிகள் முதல் தவணையில் பத்தாயிரம் வரை பெறலாம். இதற்கு 12 மாதங்கள் அவகாசம். அதைக் கட்டி முழுமை பெற்ற பின் இரண்டாவது தவணையாக 18 மாதங்களுக்கு 15000 முதல் 20000 வரை பெற்றிடலாம். மூன்றாவது தவணையாக அதிகபட்சமாக 36 மாதங்களுக்கு முப்பதாயிரம் முதல் 50 ஆயிரம் வரை கடன் பெறலாம். திருப்பி கட்டும் ரூபாய் மதிப்பு மாத அடிப்படையில் வசூலிக்கப்படும். இத்திட்டம் ஏழு% வட்டியை ஆண்டிற்கு வட்டி விகிதம் கணக்கிடப்படும். இதற்கு அப்ளை செய்த வியாபாரிகளுக்கு காலாண்டு அடிப்படையில் வியாபாரிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும், மானியம் காட்ட வேண்டிய தேதிக்கு முன்னரே கட்டி விட்டால் முழு தவணையும் வழங்கப்படும். டிஜிட்டல் முறைப்படி பணம் செலுத்துவதற்கு ஆண்டிற்கு 1200 ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும்.
மேலும் சரியான முறைப்படி கடனை கட்டுவோருக்கு வருங்காலங்களில் கூடுதல் தொகை வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி இதன் முக்கிய பங்குதாரர். இதற்கு ஆதார் அட்டை மற்றும் ஓட்டர் ஐடி கண்டிப்பாக தேவை. மேற்கொண்டு ஓட்டுனர் உரிமம், MGNREGA அட்டை அல்லது பான் கார்டு ஆகியவற்றையும் சமர்பிக்கலாம். இத்திட்டத்தை பெற முயலும் சிறு வியாபாரிகள் பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். pmsvanidhi.mohua.org.in என்ற இணையதளம் மூலமாகவும், மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.