State Bank of India தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஹர் கர் லக்பதி திட்டம் இன்று திட்டத்தின் மூலம் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைந்து அதிக வட்டியை பெற முடியும்.
ஹர் கர் லக்பதி என்ற ரெக்கரிங் திட்டத்தினுடைய பயன்கள் :-
✓ சாதாரண ரெக்கரிங் திட்டத்தில் மாதம் 500 1000 ரூபாய் செலுத்தினால் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின்பு அதற்கான வட்டி தொகைகள் வர முடியும். ஆனால் இந்த திட்டமானது அவற்றிலிருந்து சற்றே வேறுபட்டது. இதில் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் உடைய விருப்பம்
✓ கால அளவை முடிவு செய்து கொண்டு அதன் பின் முதலீடு செய்ய தொடங்கினால் அதிக அளவு லாபம் பெறலாம்.
✓ RD திட்டத்தில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணையலாம்
✓ 10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்கள் உடைய பெற்றோர்கள் இணைந்து திட்டத்தில் சேரலாம்
✓ 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கால அளவை இந்த திட்டம் கொண்டிருக்கிறது
✓ முதிர்வு தேதிக்கு முன்பாக பணத்தை எடுத்தால் வட்டி விகிதத்தில் அபராதம் விதிக்கப்படும்.
முதியவர்களுக்கான சிறப்பு சலுகைகள் :-
✓ 3 வருடங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பெற வேண்டும் என்றால் 2500 ரூபாய் மாதத் தவணையாக செலுத்த வேண்டும். இதற்கு வட்டி 6.75% ஆனால் முதியவர்கள் 2480 ரூபாய் செலுத்தினாலே அவர்களுக்கு 7.25% வடி வழங்கப்படும்.
✓ 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றால் 1810 ரூபாய் சாதாரண நபர் செலுத்த வேண்டும் அதுவே முதியவர்கள் 1791 செலுத்தினாலே போதும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.