மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண்… பெற்றோர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…
தேன்கனிக்கோட்டை பகுதியில் மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக 10ம் வகுப்பு பயிலும் மாணவியை பெற்றோர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை பகுதியில் அண்ணாநகரில் கூலித் தொழிலாளி கணேசன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தான் சுபிக்சா. மாணவி சுபிக்சா தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் பள்ளியில் மாதத் தேர்வு நடந்த நிலையில் மாதத் தேர்வில் மாணவி சுபிக்சா அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார்.
இந்நிலையில் மாணவி சுபிக்சா அவர்களின் பெற்றோர்களை அழைத்த ஆசிரியர்கள் சுபிக்சா மாதத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளது பற்றி பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். வீட்டுக்கு சென்ற பிறகு மாணவி சுபிக்சா அவர்களின் பெற்றோர் மாணவி சுபிக்சா அவர்களை குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி துப்பட்டாவால் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி சுபிக்சா தற்கொலை செய்ததை பாய்த்து பெற்றோர்கள் கதறினர்.
இதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை காவலர்கள் மாணவி சுபிக்சா அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கெண்டது குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதிப்பெண் குறைவாக எடுத்து பெற்றோர் கண்டித்த காரணத்திற்காக மாணவி சுபிக்சா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.