செலவில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க இயற்கையான எளிய வழி! 

0
36

செலவில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க இயற்கையான எளிய வழி! 

இன்றைய சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை மலச்சிக்கல். இதற்கு காரணம் நம்முடைய ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம். இன்றைய காலகட்டத்தில் யாரும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வதே இல்லை. மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.

பதப்படுத்தப்பட்டு இறைச்சிகள், நார்ச்சத்து இல்லாத கொழுப்பு உணவுகள், போன்றவை நமக்கு மலச்சிக்கல் பிரச்சினையை உண்டாக்குகின்றன. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் உதாசினம் செய்யும்பொழுது அது குடல் சார்ந்த பிரச்சனையாக உருவெடுக்கிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு குடல் புழுக்களின் தொந்தரவும் அதிகமாக இருக்கும். உணவு கழிவுகள் சரியாக வெளியேறாததால் குடல் புழுக்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி ஊட்டச்சத்து பற்றாக்குறையை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படுத்தி விடும்.

எனவே மலச்சிக்கல் பிரச்சனையை அப்படியே விடாமல் காலையில் எழுந்ததும் காலை கடன் முடிக்கும் பழக்கம் எப்போதும் இருக்க வேண்டும். மலம் எளிதாக வெளியேற நீங்கள் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு மலச்சிக்கல் பிரச்சினைகளை ஈஸியான முறையில் சரி செய்யலாம்.

உணவே மருந்து என்ற முறையில் சில பொருட்களைக் கொண்டு மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும் முறையை பார்ப்போம்.

1. தண்ணீரில் ஊற வைத்த கடுக்காயை மென்று தின்று வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

2. இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

3. இரவில் குல்கந்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர மலச்சிக்கல் நீங்கும்.

4. முழுவதும் பழுக்காத பப்பாளி, கொய்யாப்பழம், சுரைக்காய் ஜூஸ் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.