இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!!

Photo of author

By Parthipan K

இனி இவர்களுக்கு மட்டும்தான் லோயர் பெர்த் சீட்!! ரயில்வேயின் மற்றொரு முக்கிய முடிவு!!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை  பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அறிவிப்புகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே துறை புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் இனி மாற்றுத்திறனாளிகளின் பெயர் ஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு புதிய வசதியை ரயில்வே துறை ஏற்படுத்தி தந்துள்ளது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் பெர்த் வழங்கப்பட உள்ளது.இது ரயில் பயணத்தை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருக்கும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. மேலும் ஸ்லீப்பர் வகுப்பில் 4 இருக்கைகளும் ,மூன்றாம் வகுப்பில் 2 இருக்கைகளும் ,ஏசி பெட்டியில் 2 இருக்கைகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே துறை ஒதுக்கியுள்ளது. எனவே அவர்கள் அமரும் இருக்கைக்கு ஏற்ப முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இது மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கு லோயர் பெர்த்தை வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் ஸ்லீப்பர் வகுப்பில்  லோயர் பெர்த் இருக்கைகளும் ,மூன்றாம் வகுப்பில் 4 லோயர் பெர்த் இருக்கைகளும் ,ஏசி பெட்டியில் 4 லோயர் பெர்த்  இருக்கைகளையும் 45 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரயில்வே துறை வழங்கியுள்ளது.