இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம் 

Photo of author

By Divya

இனி பைப்லைனில் LPG கேஸ் வீடு தேடி வரும்! அவ்வளவு தான் சிலிண்டருக்கு குட் பாய் சொல்லிடலாம்

மக்களே 14 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தனித்தனியாக பைப்லைன் வழியாக லைன் கேஸ் விநியோகம் செய்யும் திட்டமானது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றாட வாழக்கையில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு இலவச கேஸ் இணைப்பு வழங்கி வருவதால் நாட்டில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை எண்ணெய் நிறுவனங்கள் கையில் எடுத்திருக்கிறது.ஏற்கனவே குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் வீடுகளில் குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் எரிவாயு சிலிண்டரை ஒப்பிடுகையில் குழாய் வழி கேஸ் இணைப்பு மூலம் 20% பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

இந்த குழாய் கேஸ் விநியோக திட்டத்தை தமிழகத்தில் தொடங்க பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மீது மக்களுக்கான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது தமிழகம் முழுவதும் 30,000க்கும் அதிகமானோர் பதிவு செய்திருக்கின்றனர்.தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இனி 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு குட் பை சொல்லிவிட முடியும்.

அமெரிக்கா,ரஷ்யா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பைப் லைன் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.இவை சுற்றுச்சூழலை பாதிக்காது.அதே நேரம் செலவும் குறைவு என்ற காரணத்தினால் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 2030 ஆம் ஆண்டிற்குள் 2.30 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மக்கள்,பைப் லைன் வழியாக இயற்கை எரிவாயு இணைப்பு பெற கட்டண சலுகைகள் வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முதலில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கேஸ் பைப் லைனை வீட்டிற்கு பெற 576 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்தாலே போதும் என்று கூறப்படுகிறது.