நிகழப்போகும் சந்திர கிரகணம்!!! திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடல்!!!
இந்த மாதம் இறுதியில் சந்திர கிரகணம் நிகழப்போவதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணிநேரம் மூடப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தற்பொழுது புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகின்றனர். மேலும் பக்தர்கள் நாள் கணக்காக காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதம் 29ம் தேதி சந்திரகிரகணம் நடக்கவிருக்கும் நிலையில் திருப்பதி கோயில் 8 மணி நேரம் மூடப்படவுள்ளது.
அக்டோபர் 29ம் தேதி சந்திரகிரகணம் என்பதால் அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 28ம் தேதி இரவு 7.05 மணி முதல் அக்டோபர் 29ம் தேதி அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு காலை 5.15 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.
மேலும் செப்டம்பர் 28ம் தேதி சகஸ்ர தீப அலங்கார சேவையும், மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்படவுள்ளது. இதை மனதில் வைத்து திருமலை திருப்பதி பயணத்திற்கு பக்தர்கள் அனைவரும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 30ம் தேதியான சனிக்கிழமை நாளானது புரட்டாசி மாத சிறப்பு சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் சனிக்கிழமை(செப்டம்பர்30) பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று 30 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.