சென்னையில் சென்ற ஆண்டு மட்டும் 4,389 விபத்துகள் நடந்துள்ளது. இதற்க்கு காரணம் அதிக சிசி திறன் கொண்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் இதற்க்கு மற்றொர் மிக முக்கியமா காரணம் அதிகர்த்து வரும் மது போதை. இந்த மது போதையில் உயர் ரக கார்களை அதி வேகத்தில் இயக்குவதால் விபத்துகள் நடக்கிறது.
அனைத்து மாவட்டத்திலும் விபத்துகள் அதிகமாக இந்த சொகுசு கார்கள் மூலம் தான் நடக்கிறது. அதே போலத்தான் இன்று சென்னையில் பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் வயது 39. ஃரபிடோ-வில் (பைக் டாக்ஸி) பணிபுரிந்து வந்த இவர், தனது இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் இன்று சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் அவர் சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். மேலும் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அதனை பார்த்த பொது மக்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அவர் பாதி வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.