பிரபல நடிகர் கடனை அடைக்க நீதிமன்றம் அவகாசம்! லைக்கா நிறுவனம் சோகம்!

0
192
Lyca productions upset on highcourt decision
Lyca productions upset on highcourt decision

பிரபல நடிகர் கடனை அடைக்க நீதிமன்றம் அவகாசம்! லைக்கா நிறுவனம் சோகம்!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விஷால் தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார்.விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த சில வருடங்களாக அவர் நடத்தி வருகிறார்.2016ம் ஆண்டு நடிகர் விஷால் மருது திரைப்பட பணிகளுக்காக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடனாக பெற்றார்.அந்தக் கடனை திரும்பச் செலுத்த முடியாததால் நடிகர் விஷால் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தை அணுகினார்.

விஷால் வாங்கிய கடனை லைக்கா நிறுவனம் அடைக்குமாறும் அந்த பணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகவும் அவர் லைக்கா நிறுவனத்திடம் கூறியிருந்தார்.இதனை கருத்தில்கொண்டு லைக்கா நிறுவனமும் நடிகர் விஷால் வாங்கிய கடனை அடைத்துள்ளது.பின்னர் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் விஷால் லைக்கா நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டார்.அந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் விஷால் தங்களிடம் வாங்கிய கடன்தொகையை முப்பது சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என லைக்கா நிறுவனம் கூறியிருந்தது.

மேலும் அந்த கடன் தொகையை தவணை முறையில் செலுத்துவதாகவும் விஷால் கூறியிருந்தார்.இந்த ஒப்பந்தத்தில் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் 2 திரைப்படம் வெளியான பிறகு 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழு கோடி ரூபாய் கடன் பணத்தை தருவதாகவும் மீதியிருக்கும் கடன்தொகையை 2020ம் ஆண்டு இறுதிக்குள் செலுத்துவதாகவும் நடிகர் விஷால் தரப்பில் கூறப்பட்டது.இதனிடையே லைக்கா நிறுவனமானது தன்னிடம் வாங்கிய கடனைக் கட்டச் சொல்லி பல முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆனால் விஷால் தரப்பிடம் இருந்து எந்த பதிலும் வராததால் லைக்கா நிறுவனம் நடிகர் விஷால்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் துப்பறிவாளன் 2 திரைப்படம் இன்னும் வெளியாகாததால் நடிகர் விஷால் கடனைத் திரும்ப செலுத்தவில்லை என தெரிவித்தது.மேலும் லைக்கா நிறுவனத்திற்கு வழக்கை விசாரித்த நீதிபதி லைக்கா நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதித்தும் வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

Previous articleநண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!
Next articleகொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!