ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’… பிரபல ஹீரோக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Photo of author

By Vinoth

ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’… பிரபல ஹீரோக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Vinoth

ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’… பிரபல ஹீரோக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது.

குசேலன் மற்றும் ஜி ஒன் ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் சிறப்புத் தோற்றத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.

இந்த படத்தில் முதலில் நடிக்க தயங்கிய ரஜினிகாந்த் மகளின் வற்புறுத்தலால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகன் வேடத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகியோர் முதலில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் இப்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

லால் சலாம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இன்று சென்னையில் பூஜை நடந்த நிலையில் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். அதனால்தான் படத்தில் கிரிக்கெட் விளையாடத் தெரிந்த விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் கதாநாயர்களாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தர்பார் மற்றும் அண்ணாத்த என அடுத்தடுத்து தொயர் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ரஜினி இப்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரிக்க உள்ளது.