மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!! ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு அவர் பெயர் தான் வைக்கவேண்டும்!!

0
204
M. K. Stalin's action order!! Srivaikundam Hospital should be named after him!!
M. K. Stalin's action order!! Srivaikundam Hospital should be named after him!!

நல்லக்கண்ணு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: 

“நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக  சிந்தித்து பேசக்கூடிவர் நல்லக்கண்ணு. திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லக்கண்ணு”.

“திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் நல்லக்கண்ணு உறுதுணையாக விளங்கி கொண்டிருக்கிறார். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என நல்லகண்ணு அய்யாவைக் கேட்டுக் கொள்கிறேன். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்திருக்கிறது. கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல; மதச்சார்பின்மை கூட்டணி, நிரந்தர கூட்டணியாக இருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வெளியான தமிழக அரசு குறிப்பின்படி:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு பிறந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் வசதி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு அதற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு கட்டடம்” என பெயர் சூட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே 2022ஆம் ஆண்டு தமிழக அரசு தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஒபிஎஸ் -க்கு சொந்தமாகப்போகும் இரட்டை இலை பிராம்மாஸ்திரம்!! 13 ஆம் தேதி எடப்பாடிக்கு வைக்கும் செக்!!
Next articleதமிழக வெற்றி கழகம் ஆர்.நல்லக்கண்ணு-க்கு நூற்றாண்டு வாழ்த்துக்கள்!! எக்ஸ் தளத்தில் பதிவு!!