சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்!

0
234

சிவகார்த்திகேயன் பட பஞ்சாயத்தை முடித்து வைத்த லோகேஷ்… மீண்டும் தொடங்கிய ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் நடித்து வந்த மாவீரன் திரைப்பட ஷூட்டிங் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

பிரின்ஸ் படத்துக்கு அடுத்து  சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். கதாநாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, நகைச்சுவை வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லன் வேடத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இந்த படம் தொடங்கி சில மாதங்களுக்குள்ளாகவே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் ஷூட்டிங்கில் இயக்குனரின் வேலையில் சிவகார்த்திகேயன் அதிகளவில் தலையிடுவதாகவும், அதனால் இருவருக்கும் இடையே மோதல் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஒரு கட்டத்தில் மோதல் பெரிதாகி ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதை மறுத்த படக்குழுவினர் மழைக் காரணமாகவே ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக கூறிவந்தனர்.

இந்நிலையில் நேற்று  முதல் சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனருக்கும் இடையிலான பஞ்சாயத்தை பேசி முடித்து வைத்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷும், அஸ்வினும் நல்ல நண்பர்கள் என்பதால் சிவகார்த்திகேயனைப் பேசி சமாதானம் செய்து வைத்துள்ளாராம் லோகேஷ்.

இந்நிலையில் ஏற்கனவே மிஷ்கின் வில்லனாக நடிக்கும் நிலையில் இப்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் சுனிலும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

Previous articleதவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் உரிமை அறநிலையத்துறைக்கு இருக்கிறது! அமைச்சர் சேகர்பாபு!
Next articleஅதிமுக சார்பாக மிக விரைவில் இந்த 5 பகுதிகளில் மண்டல மாநாடு நடத்தப்படும்! ஓபிஎஸ் அறிவிப்பால் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here