கடனை திருப்பி கட்டாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல்- நீதிமன்றம் அதிரடி.!!

நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் ஆசியான என்ற அப்பார்ட்மெண்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் வீடு வாங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு இந்துஜா லைலாண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒய்.ஜி மகேந்திரன் மகள் மதுவந்தி கடனாக வாங்கியுள்ளார்.

இதனை அடுத்து கடன் வாங்கிய சில மாதங்கள் மட்டும் தவணையை கட்டியுள்ளார். அதன்பிறகு தவணைப் பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் வட்டியுடன், அசலையும் சேர்த்து ரூ.1,21,30867 பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இருந்தபோதிலும், மதுவந்தி உரிய பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பைனான்ஸ் நிறுவனம் மெட்ரோ பாலிட்டன் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து சாவி இந்துஜா லைலேண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Comment