முதல்வரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை சிறுவன்!

0
168

கொரோனா தொற்றின் முதல் அலையின் பொழுது அமெரிக்கா எந்த அளவிற்கு பாதிப்படைந்தது தற்போது அதே நிலையில் இந்தியா இருந்து வருகிறது.இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என்று சொல்லப்படுகிறது

இவ்வாறான சூழ்நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலையை பார்த்து உலக நாடுகள் அதீத கொடை உள்ளத்தோடு இந்தியாவிற்கு பலவகையிலும் உதவிகளை புரிந்து வருகிறார்கள். அதில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முக்கிய நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி அமெரிக்கா சமீபத்தில் இந்தியாவுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை தனி விமானம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.


இந்த நோய் தொற்று முதல் அலையின் போது அமெரிக்காவிற்கு இந்தியா பல உதவிகளை செய்தது அதனை நினைத்துப் பார்த்த அமெரிக்கா தற்போது இந்தியா இருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையை மனதில் வைத்து இந்தியாவிற்கு உதவி புரிந்தது.அத்துடன் நோய்த்தொற்று காலங்களிலும் நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.

அதோடு மேலும் பல சமூக நிறுவனங்கள், போன்ற பல நிறுவனங்கள் மூலமாக மத்திய அரசிற்கும்m மாநில அரசிற்கும் நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மிதிவண்டி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நோய்த்தொற்று நிவாரண நிதிக்கு அனுப்பிய மதுரை சிறுவனுக்கு புதிய மிதிவண்டி வாங்கி பரிசளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக தன்னுடைய சமூக வளைதளப்பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு இருப்பதாவது, மதுரையை சார்ந்த ஹரிஷ் வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் பணத்தை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பியதை கேட்டு நான் நெகிழ்ந்து விட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அந்த சிறுவனுக்கு புதிய மிதிவண்டியை வாங்கி கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டு இருக்கிறார்.

Previous articleதிடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!
Next articleபிரபல இயக்குனர் மற்றும் நடிகரின் தாயார் திடீர் மரணம்!! சோகத்தில் ஆழ்ந்த நடிகர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here