திடீரென்று அதிமுகவில் ஏற்பட்ட பரபரப்பு! எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்!

0
58

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து அவருடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்த நிலையில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அதிமுக சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்து 66 இடங்களிலும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றி அடைந்து எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது.

இந்தநிலையில், அந்த கட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவாதம் எழுந்திருக்கிறது. இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும், இதுதொடர்பாக தகராறில் ஈடுபட்டதன் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட அந்த கட்சியில் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உள்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னரே யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதில் கடுமையான இழுபறி நீடித்து வந்தது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.தற்சமயம் இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக அந்த கட்சியில் பூதாகரமாக எழுந்துள்ளது தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணி என அதிமுகவில் தற்சமயம் பிளவு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், அந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இடையே மிகப் பெரிய விவாதம் நடந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. தோல்விக்கு எடப்பாடிபழனிசாமி எடுத்த முடிவுகள் தான் காரணம் என்று ஓ பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி இருப்பதாகவும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக வடமாவட்டங்களில் வாக்குகள் கிடைக்கவில்லை என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி கொங்குமண்டல பகுதியில் நல்ல வெற்றியை பெற்றிருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுத்தர இயலாது என தெரிவித்திருக்கிறார். என சொல்லப்படுகிறது.நடைபெற்ற சட்டசபை தேர்தலில் செலவு செய்தது யார் 234 சட்டசபை தொகுதிகளிலும் உடைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றோம் எவ்வாறு விட்டுக் கொடுப்பது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு நீங்கள் செலவு செய்த பணம் கட்சி உடையது தானே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அறிவித்ததால் தான் தென்மாவட்டத்தில் வெற்றியை இழந்திருக்கிறோம் என்று ஓ பன்னீர்செல்வம் பதிலளித்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில் இன்று மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்று முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.