மஞ்சப்பை விற்பனை அமோகம்.. கோடி கணக்கில் லாபம் பார்க்கும் மதுரை தம்பதி..!!
மதுரை சேர்ந்த தம்பதிகள் தான் கெளரி கோபிநாத் மற்றும் கிருஷணன் சுப்ரமணியன். இவர்கள் இருவரும் சென்னை மற்றும் பெங்களூர் என ஆளாளுக்கு ஒரு திசையில் கார்ப்ரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அந்த சமயத்தில் எப்போதான் சொந்த ஊருக்கு செல்வோம் என்று இருவருமே ஏங்குவார்களாம்.
அதே நேரம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை எப்படியாவது நிறுத்த வேண்டுமென இவர்கள் இருவரும் இணைந்து மாத்தி யோசித்துள்ளனர். அதற்கு கிடைத்த விடை எல்லோ பேக் என்ற பை தயாரிப்பு நிறுவனம். 2014அம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கிய ஆரம்பத்தில் இருவரும் வேலை பார்த்து கொண்டே இதை கவனித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்திற்கு மேல், தங்களின் வேலையை விட்டுவிட்டு முழுமையாக 2019 ஆம் ஆண்டு இதில் இறங்கி வேலை செய்ய தொடங்கியுள்ளனர். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. சணல் மற்றும் பருத்தியால் தயாரிக்கப்படும் இந்த பைகளில் பல்வேறு விதமான பைகளை தைத்து ரூ.20 முதல் ரூ.200 வரை விற்பனை செய்து வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவும் இந்த பைகளை தயாரித்து கொடுக்கிறார்களாம். ஆன்லைனிலும் இந்த பைகளுக்கு விளம்பரம் செய்து பிரபலமாக்கியுள்ளனர். ஒரு நாளைக்கு மட்டும் 2000 முதல் 3000 பைகளை தைத்து விற்பனை செய்து வருகிறார்களாம். இதன் மூலம் ஒரு ஆண்டில் சுமார் 3 கோடி வரை லாபம் பார்த்துள்ளார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. மஞ்சப்பையில் மாற்றி யோசித்து இந்த தம்பதி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார்கள்.