கட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்து பணம் தராததால் வாழைத்தாரை தூக்கிச் சென்ற திமுகவினர்! மதுரையில் ருசிகரம்!!
திமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராஜ கண்ணப்பன் மீண்டும் திமுக கட்சியில் இணையும் விழா மதுரையில் நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் பல்வேறு ருசிகரமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
மதுரையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பேசுகையில் கூட்டம் கலந்த வெறிச்சோடி காணப்பட்டது. வெறும் சேர்களின் மத்தியில் பேசிய வீடியோ இணையத்திலும் பரவியது. மதுரை பகுதியில் திமுக கட்சி பலம் இழந்து போனதன் காரணத்தை அறிந்து கொண்ட திமுக, கட்சியில் செல்வாக்கு உடைய முன்பு கட்சியை விட்டு விலகியவர்களையுடம் தந்திரமாக கட்சியில் இணைத்து வருகின்றனர். கடந்தமுறை மதுரை திமுக நிர்வாகிகள் ஸ்டாலின் பேச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மீண்டும் அதே போன்ற குழப்பம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக சரியா வழியை திமுக தேர்ந்தெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் இருந்து ஆட்களை வரவழைக்க மதுரை மற்றும் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒத்தக்கடையில் பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ராஜகண்ணப்பன் கட்சியில் இணையும் விழாவை அவரது சொந்த மாவட்டமான சிவகங்கையில் விழா நடைபெற வாய்ப்பில்லாமல் போனது.
இதனையடுத்து இணைப்பு விழாவை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு கட்சி உறுப்பினர்களுக்கு; பிரியாணி, குவாட்டர் மற்றும் பணம் தருவதாக கூறி கூட்டத்திற்கு ஆட்களை வரவழைத்தனர். விழாவிற்கு வந்தால் ஒரு ஆளு 300 ரூபாய் தரப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. கட்சி கூட்டம் முடிந்தபோது கடைசியில் 100 ரூபாய் மட்டுமே உடன்பிறப்புகளுக்கு வழங்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த திமுக கட்சியினர் சிலர் விழாவை சிறப்பிக்க வைத்திருந்த தோரணத்தில் இருந்த வாழைத்தாரையும், பொதுக்கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் லாவகமாக அள்ளிச் சென்றனர். இந்த நகைச்சுவை சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி மீம்ஸ்களாக உருவெடுத்தது. ஆம் அவர்களுக்கென்று ஒரு தனி வரலாறு உண்டு என்பதுபோல் பல்வேறு விதமான விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தன்னை பணம் தருவதாக கூறி ஏமாற்றியதால், ஆவேசமாக வாழைத்தாரை தூக்கிக் கொண்டு மதுரை மாட்டுத்தாவணி அருகிலுள்ள காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து பணமாக்கினர். திமுக கூட்டத்தில் நடந்த, ருசிகரமான சம்பவம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. முன்னாள் எம்எல்ஏ ராஜ கண்ணப்பன் அதிமுக மற்றும் திமுக வில் மாறி இணைந்து அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.