கலிபோர்னியாவை கலக்கும் ‘மதுரை இட்லி கடை’

Photo of author

By CineDesk

கலிபோர்னியாவை கலக்கும் ‘மதுரை இட்லி கடை’

CineDesk

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லியை அமெரிக்கா வரை கொண்டு சென்ற மதுரை இட்லி கடை உரிமையாளர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உணவகம் என்றாலே அது மதுரை தான் என்பது அனைவரும் அறிந்ததே. 24 மணி நேரமும் சுடச்சுட உணவுகள் ஓட்டல்களில் கிடைக்கும் என்பதும் இதனால்தான் மதுரையை தூங்கா நகரம் என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு கலிபோனியா மாநிலத்தில் ’மதுரை இட்லி கடை’ என்ற ஓட்டலை ஆரம்பித்துள்ளார். இந்த ஓட்டல் சிறிது சிறிதாக வளர்ந்து தற்போது மிகப்பெரிய அளவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் இந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழர்கள், இந்தியர்கள் மட்டுமின்றி ஒருசில அமெரிக்கர்களின் ரெகுலராக இந்த கடைக்கு வந்து இட்லியை சுவைத்து சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மதுரையிலுள்ள இட்லியைப் போலவே அச்சு அசலாக அதே சுவையில் அமெரிக்காவிலும் கிடைப்பதால் உள்ளூரில் நாம் வாழ்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக அங்கு வாழும் தமிழர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் தற்போது இந்த ஓட்டல் ஸ்டார் ஓட்டல் என்ற நிலைக்கு இணையாக வளர்ச்சி அடைந்துள்ளது