“மதுரை மீனாட்சி அம்மன்” ஸ்ரீ ரங்கம்.. இதெல்லாம் திமுகவால் இடிக்கப்பட்டது!! கொந்தளிக்கும் இந்து முன்னணி தலைவர்!!
தமிழக சட்டப்பேரவையில் கடந்த எட்டு நாட்களாக பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.நேற்று காலை விளையாட்டு துறை சார்ந்த பட்ஜெட்டும் மாலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த பட்ஜெட் விவாதமும் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு எண்ணற்ற பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.மேற்கொண்டு இடதுசாரி என்பதை தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார்.
அந்த வகையில் இவர் அவையில் பேசியதாவது, கோயில்களை கலையாக பார்க்க வேண்டும் என்றும் கலவரத்தை வளர்க்கக்கூடாது எனவும் கூறினார்.அதேபோல கடவுளை அரசியல் ரீதியான பிரச்சாரத்திற்கு இழுக்காமல் கோவிலினுள் வைத்து வணங்கும்படியும் தெரிவித்தார்.மேலும் ஆன்மீகம் அரசியலாக்கப்படுவது வரும் காலங்களில் முற்றிலும் தகர்க்கப்படும் என்று கூறியதுதான் தற்பொழுது பல தரப்பிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
சேகர்பாபு பேசியது குறித்து கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, கோவில்கள் அனைத்தும் கலையாக பார்க்கப்பட்டதால் தான் பல தரப்பிடமிருந்து மீட்கப்பட்டு ஆன்மீகத்தில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.அதுமட்டுமின்றி தற்பொழுது சட்டசபை நடைபெற்று வரும் இடமே ஒரு காலத்தில் மல்லீஸ்வரர் கோவிலாக இருந்தது.
இவை அனைத்தையும் ஆங்கிலேயர்கள் இடித்த வரலாறு அமைச்சருக்கு தெரியுமா என்ற வகையில் கேள்வி எழுப்பினார்.அதுமட்டுமின்றி தமிழகத்தில் செயின்ட் தாமஸ் சர்ச் என ஆரம்பித்து பல இடங்களில் ஆங்கிலேயர்கள் கலை நயமிக்க கோவில்களை இடித்ததாகவும் கூறினார்.மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீரங்கமும் முகலாயர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் தெரிவித்தார்.
அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல இந்து கோவில்கள் எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அதேபோல இந்த கோவில்களை காக்க பாளையக்காரர்கள் முதல் மராட்டிய வீர சிவாஜி வரை பலர் எதிர்த்ததால்தான் தற்போது உள்ள குறைந்தபட்ச கோவில்களையாவது காப்பாற்ற முடிந்தது என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுவதாக தெரிவித்தார்.