மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

Photo of author

By Pavithra

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

Pavithra

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி,நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இவரது மகள் ஜோதி துர்கா(19) நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.

அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஜோதி துர்கா சென்ற ஆண்டு,நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில்,தனியார் நீட் பயிற்சி மையம் ஒன்றில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று, மீண்டும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்திலும்,தனது பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற பயத்திலும்,பெற்றோர்கள் தூங்கிய பிறகு அவர்களை உள்ளே வைத்து பூட்டி விட்டு வெளிய ஹாலில் துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மேலும் தற்கொலைக்கு இதுதான் காரணம் என்றும் ஒரு வீடியோவும் லெட்டரும் பதிவு செய்துள்ளார்.

அந்த லெட்டரில் குறிப்பிட்டுள்ளவாறு, Neenga en mela romba nambikai vachirukinga am sorry.oruvela enakku college la seat kidaikalana all yours hard work for me என்று உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்தார்.தொடர்ந்து தற்போது துர்காவின் உயிரிழப்பும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.