2016 ஆம் ஆண்டு ரூ.1,875 கோடியில் தொடங்கப்பட்ட புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு மீளவிட்டான் வழியாக 143.5 கிமீ தொலைவில் அமைக்கப்பட வேண்டிய ரயில் பாதை மீளவிட்டான் முதல் மேல்மருதூர் வரை 18 கிமீ தொலைவில் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு தற்பொழுது வரை ரூ.260 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து டிசம்பர் 19 அன்று ரயில்வே துணை வர்த்தக பொறியாளர் ஸ்ரீவித்யா கடிதம் மூலமாக தமிழ்நாடு போக்குவரத்து துறை கூடுதல் செயலர் எஸ்.கார்மேகத்திற்கு தெரிவித்திருப்பதாவது :-
திண்டிவனம்-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி, அட்டிபட்டு-புத்தூர், ஈரோடு-பழநி, சென்னை-கடலூர், மதுரை-தூத்துக்குடி வழி அருப்புக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர்-இருங்காட்டுக்கோட்டை ஆகியவற்றின் பணி நிலவரம் மற்றும் நிதி நிலை குறித்து குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், மதுரை – தூத்துக்குடி இடையில் அருப்புக்கோட்டை வழியாக 143.5 கிமீ தொலைவில் அமைக்கப்பட இருந்த ரயில்வே பாதை மார்ச், 2022 இல் மீளவிட்டான்-மேல்மருதூர் இடையிலான 18 கிமீ தொலைவு வரை பணி நிரைவடந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அதிலும், மீதமுள்ள பணிகளை தொடர வேண்டாம் என தெற்கு ரயில்வே முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக , போக்குவரத்து மற்றும் சரக்கிற்கான போக்குவரத்து குறைவு என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதற்குள், தமிழ்நாடு அரசு தான் இந்த திட்டம் தேவையில்லை என கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது என ஒன்றிய அமைச்சர் தவறான தகவலை வெளியிட்டு இருப்பது கண்டனத்து உரிய செயல் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.