Blood-ல் கலந்துள்ள கெட்ட கழிவுகளை பில்டர் பண்ணும் மேஜிக் ட்ரிங்க்!! இரத்தம் சுத்தமாக காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!

Photo of author

By Divya

Blood-ல் கலந்துள்ள கெட்ட கழிவுகளை பில்டர் பண்ணும் மேஜிக் ட்ரிங்க்!! இரத்தம் சுத்தமாக காலையில் ஒரு கிளாஸ் குடிங்க!!

Divya

நமது இரத்ததை சுத்தப்படுத்துவதால் உடலில் கழிவுகள் சேர்வதை தடுக்க முடியும்.அது மட்டுமின்றி சளி,இருமல்,ஆஸ்துமா,இருதய அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை பார்த்துக் கொள்ள முடியும்.

இரத்தத்தில் கெட்ட கழிவுகள் சேர்ந்தால் அவை உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் சிதைத்துவிடும்.எனவே இரத்தத்தில் படிந்துள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற இந்த ஜூஸ் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் – இரண்டு
2)இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

**முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

**அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு அதையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

**இந்த நெல்லி இஞ்சி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)அருகம்புல் – சிறிதளவு
2)வெற்றிலை – ஒன்று
3)மிளகு – நான்கு

செய்முறை விளக்கம்:-

**மிக்சர் ஜாரில் ஒரு வெற்றிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு அருகம்புல் மற்றும் நான்கு மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பின்னர் அரை கிளாஸ் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

**இந்த ஜூஸை வடிகட்டி பருகி வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக அகலும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

**நன்கு பழுத்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை கிளாஸிற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.

**பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து காலை நேரத்தில் பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக அகலும்.