உங்களில் பலர் குடல் புண் பாதிப்பை சந்தித்து வருவீர்கள்.இந்த குடல் புண் பிரச்சனை குணமாக இங்கு சொல்லப்பட்டுள்ள அற்புத வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – இரண்டு தேக்கரண்டி
2)சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)ஓமத் தூள் – ஒரு தேக்கரண்டி
4)பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:-
ஒரு கண்ணாடி கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் இரண்டு தேக்கரண்டி பசுந்தயிர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அரை தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.
அடுத்து அரை தேக்கரண்டி ஓமத்தை வாணலியில் போட்டு வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.இந்த இரண்டு பொடியையும் மோரில் மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து காலை நேரத்தில் குடித்து வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)மோர் – ஒரு கிளாஸ்
2)சுண்டைக்காய் வற்றல் – ஒரு தேக்கரண்டி
3)மணத்தக்காளி வற்றல் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
பசுந்தயிரில் மோர் தயாரித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சுண்டைகாய்வற்றல் மற்றும் ஒரு தேக்கரண்டி மணத்தக்காளி வற்றலை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த பவுடரை அரைத்த மோரில் போட்டு நன்றாக கலக்க வேண்டும்.இந்த மோரை தினமும் குடித்து வந்தால் அல்சர் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)மோர் – ஒரு கிளாஸ்
2)மணத்தக்காளி இலை பொடி – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவு மணத்தக்காளி இலை பொடி போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த மோரை தினமும் குடித்து வந்தால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.