உங்களின் தொங்கும் தொப்பை வற்ற.. இதோ கொத்தமல்லியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Photo of author

By Divya

உங்களின் தொங்கும் தொப்பை வற்ற.. இதோ கொத்தமல்லியை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Divya

magic-juice-that-melts-away-belly-fat

மோசமான உணவால் உடலில் கெட்ட கொழுப்பு படிகிறது.ஆண்,பெண் தங்கள் தொப்பை கொழுப்பை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி தழை
2)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

முதலில் சிறிதளவு கொத்தமல்லி தழை எடுத்து தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜார் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கொத்தமல்லி ஜூஸை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கொத்தமல்லி சாறில் பிழிந்துவிட வேண்டும்.இந்த கொத்தமல்லி ஜூஸை தினமும் பருகி வந்தால் தொப்பை கொழுப்பு வேகமாக கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை
2)எலுமிச்சை சாறு

செய்முறை விளக்கம்:-

ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த முருங்கை ஜூஸை கிளாஸிற்கு வடித்து ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிட வேண்டும்.இந்த முருங்கை கீரை ஜூஸை பருகி வந்தால் தொப்பை கொழுப்பு கூடிய விரைவில் குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய்
2)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நெல்லி ஜூஸை தினந்தோறும் செய்து பருகி வந்தால் தொப்பை,தொடை,இடுப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் கொழுப்பு கரையும்.