குளிர்காலத்தில் பலருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பருவ காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுவதன் விளைவாக மூட்டு வலி,மூட்டு வீக்கம்,கால் பாத வீக்கம்,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு எள் – 50 கிராம்
2)வெந்தயம் – 50 கிராம்
3)ஜாதிக்காய் – ஒன்று
4)முழு கோதுமை – 100 கிராம்
5)நெய் – இரண்டு தேக்கரண்டி
6)சுக்கு தூள் – 1/4 தேக்கரண்டி
7)இலவங்கப் பட்டை – ஒன்று
8)வெல்லம் / நாட்டு சர்க்கரை – 150 கிராம்
9)பாதாம் பருப்பு – 50 கிராம்
10)கருப்பு உளுந்து – 25 கிராம்
11)ஏலக்காய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
ஸ்டெப் 01:
முழு கோதுமை,வெந்தயம்,பாதாம் பருப்பு,கருப்பு உளுந்து மற்றும் கருப்பு எள்ளை தனி தனி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலச வேண்டும்.பிறகு காட்டன் துணியில் அனைத்தையும் கொட்டி நான்கு காய வைக்க வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்ததாக வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு இலவங்கப்பட்டை,தோல் நீக்கிய சுக்கு மற்றும் ஜாதிக்காயை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்க வேண்டும்.
ஸ்டெப் 03:
பின்னர் வெயிலில் காய வைத்து பொருட்களை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 04:
பிறகு இரண்டு ஏலக்காயை மிக்சர் ஜாரில் போட்டு கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.
ஸ்டெப் 06:
இப்பொழுது அகலமான கிண்ணம் எடுத்து அரைத்த பொடியை கொட்டி வைக்கவும்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து 150 கிராம் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 07:
வெல்லம் கொதித்து வரும் சமையத்தில் அரைத்த ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக அரைத்த இலவங்கப்பட்டை கலவை மற்றும் கோதுமை கலவையை கொட்டி நன்கு கலந்துவிட வேண்டும்.வெல்லப் பாகில் அனைத்தும் கலந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
ஸ்டெப் 08:
பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு தயாரித்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.இதை ஆறவைத்து ஒரு பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த லட்டுவை தினம் ஒன்று என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி,மூட்டு பகுதியில் வீக்கம் உண்டதால் போன்ற பாதிப்புகள் குணமாகும்.