இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் பாத வலி பாதிப்பை பலரும் அனுபவித்து வருகின்றனர்.இந்த பாத வலியை குணப்படுத்திக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆமணக்கு இலை – இரண்டு
2)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
பயன்டுத்தும் முறை:-
ஆமணக்கு இலை மற்றும் வெள்ளைப்பூண்டு பல் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இவை இரண்டையும் உரலில் போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கால் பாதத்தை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் தயாரித்து வைத்துள்ள ஆமணக்கு பூண்டு விழுதை கால் பாதத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் கால் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும்.இப்படி தினமும் இரவு செய்து வந்தால் கால் பாத வலி,பாத வீக்கம் குணமாகும்.
பாத வலியை குறைக்கும் மற்றுமொரு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு மிளகு – இரண்டு தேக்கரண்டி
2)காட்டன் துணி – ஒன்று
பயன்படுத்தும் முறை:-
முதலில் இரண்டு தேக்கரண்டி கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து சூடாக இருக்கும் பொழுதே லேசாக இடித்து காட்டன் துணியில் கொட்டி மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.
இதை பாத வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கால் பாத வலி மற்றும் வீக்கம் முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கல் உப்பு – சிறிதளவு
2)தண்ணீர் – தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:-
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கல் உப்பு போட்டு கலந்து விடுங்கள்.தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது கால் பாதத்தை அதில் வைத்து சிறிது நேரம் அழுத்தம் கொடுங்கள்.இவ்வாறு செய்வதால் கால் பாத வலி முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – முக்கால் தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
நல்லெண்ணெய்யை சிறிது சூடாக்கி கொள்ளுங்கள்.அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை கால் பாதத்தின் மீது பூசி சிறிது நேரம் காயவிடுங்கள்.அதன் பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் கால்களை நன்றாக கழுவுங்கள்.இப்படி செய்து வந்தால் பாத வலி முழுமையாக குணமாகும்.