சுகர் லெவலை சர்ருனு குறைக்க உதவும் மேஜிக் லீஃப்ஸ்!! இது மருந்து மாத்திரையை தூக்கி போட வைக்கும் அருமருந்து!!

Photo of author

By Divya

சுகர் லெவலை சர்ருனு குறைக்க உதவும் மேஜிக் லீஃப்ஸ்!! இது மருந்து மாத்திரையை தூக்கி போட வைக்கும் அருமருந்து!!

உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது.இங்கு பெரும்பாலும் பரம்பரை தன்மையால் மட்டுமே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.இதனால் வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரை உட்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.

எனவே இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:

1)சீத்தா இலை
2)வேப்பிலை
3)கொய்யா இலை

செய்முறை:

ஒரு கைப்பிடி அளவு சீத்தா இலை,ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை வெயிலில் காயவைத்து பவுடராக்கி கொள்ளவும்.

இதை ஒரு பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.இந்த பவுடரை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பவுடர் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முழுமையாக கட்டுக்குள் வரும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை இலை
2)நாவல் இலை
3)மாவிலை

ஒரு கப் அளவு கற்றாழை இலையை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.இல்லையென்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய கற்றாழை வற்றல் 50 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கைப்பிடி அளவு நாவல் இலை மற்றும் ஒரு கைப்பிடி அளவு மாவிலையை நன்கு காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.அதேபோல் கற்றாழை வற்றலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

அரைத்த பொடிகளை நன்கு மிக்ஸ் செய்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும்.இவ்வாறு தினமும் காலை,மாலை என இருவேளை இந்த பானத்தை அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.