உடல் எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டுமே நிற்க,நடக்க உடலை இயக்க முடியும்.ஆனால் இன்று பலரும் கால்சியம் சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் எலும்பு தேய்மானம்,மூட்டு வலி,இடுப்பு மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
சிலருக்கு எதிர்பாரா விபத்தால் எலும்பில் அடிபடுதல்,எலும்பு உடைதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது.இதனால் அவர்களின் வாழக்கையே முடங்கிவிடுகிறது.உடைந்த மற்றும் வலுவில்லாத எலும்புகளை வலிமையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கஞ்சி செய்து குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு உளுந்து – நான்கு தேக்கரண்டி
2)ஜவ்வரிசி – இரண்டு தேக்கரண்டி
3)பார்லி அரிசி – இரண்டு தேக்கரண்டி
4)சுக்கு – ஒரு பீஸ்
5)ஏலக்காய் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
1.முதலில் நான்கு தேக்கரண்டி அளவு உடைத்த கருப்பு உளுந்தை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
2.அடுத்து இரண்டு தேக்கரண்டி ஜவ்வரிசி மற்றும் இரண்டு தேக்கரண்டி பார்லி அரிசியை உளுந்து சேர்த்த கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
3.பிறகு இதை ஒரு காட்டன் துணியில் பரப்பி இரண்டு மணி நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.
4.பின்னர் இதை வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
5.இதன் பிறகு வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.இதை தொடர்ந்து ஒரு ஏலக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
6.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.இதற்கு அடுத்து அரைத்த உளுந்து கலவையை அதில் கொட்டி குறைவான தீயில் கலந்துவிட வேண்டும்.
7.கஞ்சி பதம் வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு இந்துப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.உப்பிற்கு பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.