அல்சர் மற்றும் வயிறுப்புண்ணை ஆற்றும் மந்திரப் பொடி!! ஒரு வாரத்தில் நிரந்தர தீர்வு உண்டு!!

Photo of author

By Divya

அல்சர் மற்றும் வயிறுப்புண்ணை ஆற்றும் மந்திரப் பொடி!! ஒரு வாரத்தில் நிரந்தர தீர்வு உண்டு!!

Divya

Magic powder for ulcers and stomach ulcers!! Permanent solution in one week!!

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சனையாக அல்சர் உருவெடுத்துள்ளது.பதப்படுத்தப்பட்ட உணவுகள்,பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள்,செயற்கை வண்ணம் கலந்த உணவுகளால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அல்சர்,வயிறு புண் போன்றவை உண்டாகிறது.

அல்சரில் கேஸ்ட்ரிக் அல்சர்,பெப்டிக் அல்சர்,டியோடினல் அல்சர்,மவுத் அல்சர் என்று பல வகை உள்ளது.அதிக காரம்,மசாலா நிறைந்த உணவுகள் மற்றும் புளிப்பு உணவுகளால் அல்சர் உண்டாகிறது.

சூடான காபி,டீ.குளிர்பானங்களாலும் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது,பட்டினி இருப்பது போனற காரணங்களாலும் இரைப்பையில் புண்கள் ஏற்படுகிறது.

தினமும் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு அல்சர் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அல்சர் அறிகுறிகள்:

1)நெஞ்சு பகுதியில் எரிச்சல்
2)அடிக்கடி புளித்த ஏப்பம் வருதல்
3)குறைவான உணவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு
4)வயிறு வலி

அல்சர் பிரச்சனைக்கு தீர்வு இதோ:

*பச்சை வாழைக்காய்
*சின்ன வெங்காயம்
*சீரகம்
*மஞ்சள் தூள்
*உப்பு

முதலில் ஒரு பச்சை வாழைக்காயை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இதை சுடுநீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை போட்டு பொரியவிட வேண்டும்.

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள பச்சை வாழைக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.

வாழைக்காய் பாதியாக வெந்து வந்ததும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்து சாப்பிட்டு வந்தால் அலசர் குணமாகும்.

அதேபோல் தினம் ஒரு கப் தேங்காய் பால் சாப்பிட்டு வந்தாலும் அல்சருக்கு உரிய தீர்வு கிடைக்கும்.