இந்த மகிழம் பூவின் மகிமையை கேட்டால் நம்பமாட்டீர்கள்..!! அனைத்திற்கும் ஒரே தீர்வு..!!

Magizham Poo in Tamil: நம் வாழக்கூடிய இந்த சுற்றுச்சூழலில் நிறைய வகையான மரங்கள் உள்ளன. ஆனால் நமக்கு சிறுவயது முதல் பார்த்தது, படித்தது என்று ஒரு சில மரங்களை பற்றி மட்டும் தான் தெரியும். பல மரங்களை புதிதாக பார்த்தாலும் நாம் அதனை பற்றி தெரிந்துக்கொள்ள முற்படுவதில்லை அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் மரம் தான் மகிழம் மரம். இந்த மரத்தில் உள்ள அனைத்தும் மருத்துவக்குணம் கொண்டது. அதிலும் இந்த மரத்தின் பூவின் (Magilam Poo) மருத்துவக்குணங்களை பற்றி பார்க்கலாம்.

மகிழம்

இதனை மகிழம் அல்லது வகுளம் என்று அழைப்பார்கள். இந்த மரம் சங்ககாலத்திற்கும் இந்த மகிழம் பூவிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. அந்த வகையில் குறிஞ்சி நில மக்களின் பூவாக இந்த மகிழம் பூ உள்ளது. அந்த காலத்தில் பெண்கள் இந்த பூவை தலையில் சூடிக்கொண்டும், நெத்திச்சூட்டியாகவும் அணிந்துக்கொண்டுள்ளனர்.

இந்த மரம் ஆசியா கண்டத்தில் வெப்ப மண்டல காடுகளில் அதிக அளவு காணப்படுகிறது. மேலும் இந்த மரங்களை நாம் அதிக அளவு கோயில்களில் பார்த்திருப்போம்.

மகிழம் பூ மருத்துவ பயன்கள் – Magizham Poo Benifits in Tamil

இந்த மகிழம் மரம் சிவனுக்குரிய மரமாக பார்க்கப்படுகிறது. அதனால் சிவாலயங்களில் இதனை நாம் காணலாம்.

இந்த மகிழம் பூ இயற்கையிலேயே அதிக மணம் வீசும் என்பதால் இதனை பறித்து வந்து நாம் குளிக்கும் நீரில், வெந்நீரில் போட்டு குளித்து வர நம் உடலில் இருந்து வீசக் கூடிய நாற்றம் நீங்கி விடும். சிலருக்கு நறுமணப் பொருட்கள் பயன்படுத்தியும் நீங்காத நாற்றம் இந்த பூக்களை பயன்படுத்தி குளித்தால் நீங்கி விடும்.

இந்த பூக்களை மாலையில் தேநீரில் கலந்து குடித்து வர, (பால் சேர்க்காமல்) இரவில் நன்றாக தூக்கம் வரும்.

மேலும் இந்த பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து மூக்குப்பொடி போன்று உபயோகித்தால் நீண்ட நாள் படுத்தி எடுத்து வந்த ஒற்றை தலைவலி நீங்கும்.

மகிழம் பூ வை பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை குடித்து வர உடல் வலி, தோள் வலி, கால் வலி, கை வலி போன்றவை நீங்கும். உடல் வலிமை பெருகும்.

குழந்தை இல்லாதவர்கள் இந்த பூவை 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் குழந்தை பேறு கிடைக்கும்.

இதனை அக்னி ஹோம குண்டத்தில் போட வேண்டிய பூக்கள். இந்த பூக்களை ஹோம குண்டத்தில் போட்டு வழிபடலாம். ஊதுபத்தி போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

இந்த பூக்களை பொடி செய்து, அந்த பொடியில் தண்ணீர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு எல்லாம் குறைந்துவிடும்.

மேலும் இந்த மகிழம் பழம் சப்போட்டா குடும்பத்தை சேர்ந்தது என்பதால் இதனை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். இந்த பழம் ஆரஞ்ச் நிறத்தில் சிறியதாக இருக்கும்.

மகிழ மரத்தின் பட்டையை பொடி செய்து வாய் கொப்பளிக்க, வாய் துர்நாற்றம், வாய்ப்புண், பூச்சிபல் வராது.

இந்த பூக்கள் காய்ந்த பிறகு தான் நன்றாக நறுமணம் வரும். மேலும் இந்த பூக்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

மேலும் படிக்க: நிம்மதி இல்லையா? உங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால் உடனே தூக்கி எறிங்க..!!