Setru Pun: மழைக்காலத்தில் வரும் சேற்றுப் புண்ணை சரி செய்வது எப்படி? இதை செய்தால் போதும் காலையில் சரியாகிவிடும்..!!

0
75

Setru Pun: பொதுவாக ஒவ்வொரு பருவக்காலங்களிலும் நமது ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் நமக்கு ஒரு பிரச்சனை வந்துக்கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் பார்க்க போனால் கோடைக்காலத்தில் கடும் வெயிலால் உடல் சூடு, வியர்க்குரு, குளிர்ககாலத்தில் வெள்ளையாக தோலில் ஏற்படுவது, மழைக்காலத்தில் இந்த சேற்றுப்புண். இந்த சேற்றுப்புண் வந்துவிட்டால் நம்மால் நடக்க கூட முடியாது. அந்த அளவிற்கு படாத பாடு படுத்தும் இந்த புண். இதனை ஆங்கிலத்தில் (Athlete’s foot In Tami) என்று அழைப்பார்கள்.

நாம் இந்த பதிவில் சேற்றுப்புண் ஏற்பட்டால் அதனை குணப்படுத்துவதற்கான மருந்து என்ன என்பதை இந்த பதிவில் (setru pun varamal iruka tips) காண்போம்.

சேற்றுப்புண் மருந்து

பொதுவாக இந்த சேற்றுப்புண் நீரில் நின்று அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு வரும். இந்த புண் கால் விரல் நடுவில் அரிப்பு ஏற்பட்டு பிறகு  சிவந்து புண்ணாக மாறிவிடும். இந்த புண் பெருமளவிற்கு எரிச்சலையும், வலியையும் உண்டாக்கும்.

சேற்றுப்புண் பொதுவாக அழுக்கு தண்ணீரில், மழைநீரில், மண்கலந்த தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் ஏற்படும். இதற்கு காரணம் அந்த மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்கள் தான் காரணம். இதற்கு நீங்கள் நீரில் வேலை செய்யும் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இயலாதவர்கள் வெளியில் சென்று வந்தவுடன் கால் விரல்களுக்கு இடையில் சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.

சேற்றுப்புண் வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு கல் உப்பு போட்டு கால் விரல் நடுவில் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். பிறகு துணிக்கொண்டு ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் வேப்பிலை, மருதாணி இலை, கல் உப்பு, தேங்காய் எண்ணெய் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுதை எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன்பு புண்களில் இந்த மருந்தை தேய்த்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சேற்றுப்புண் சரியாகிவிடும்.

நீங்கள் இதனை எல்லாம் அரைப்பதற்கு பதிலாக நாட்டு மருந்துக்கடைகளில் வேப்பிலை பொடி, மருதாணி பொடி வாங்கி வந்து தேங்காய் எண்ணெய் கலந்தும் தேவைப்படும் போது தேய்த்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளார்களா? அவர்கள் முன் இதை எல்லாம் செய்யாதீர்கள்..!!