கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!!

Photo of author

By Divya

கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!!

எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரப்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் புரளும்.ஆனால் உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம்.

வீட்டில் ஒட்டடை,உடைந்த பொருட்கள்,கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும்.உப்பு ஜாடியில் எப்பொழுதும் உப்பு நிரப்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் தவிர்த்து மற்ற தினங்களில் வீட்டையும்,பூஜை அறையையும் சுத்தம் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

இன்று வீடு சுத்தம் செய்ய பல திரவங்கள் விற்பனை செய்யப்படுகிறது.இதை கொண்டு வீட்டை சுத்தம் செய்வதை விட கோமாதா சாணத்தை வைத்து வீட்டை துடைத்தால் அந்த’வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.

வீட்டு வாசலில் அரிசி மாவில் கோலமிட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைப்பது,சாணத்தை கொண்டு வீட்டை துடைப்பது,பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற நல்ல செயல்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால் செல்வதை கொடுக்கும் லட்சுமி தயார் வீட்டில் வாசம் செய்வார்.

அதுமட்டும் இன்றி வீட்டு பூஜை அறையில் காலை மற்றும் மாலை இருவேளையும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.மண் அகல் அல்லது காமாட்சி விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு பல மடங்கு அதிகரிக்கும்.

காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபடவும்.மாலையில் வீட்டை கூட்டி சுத்தம் செய்த பின்னர் விளக்கேற்றி கடவுளை வழிபடவும்.இவ்வாறு செய்வதினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து செல்வ செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்.